TNPSC Thervupettagam

கடல் ஆமைகள் பாதுகாப்பு மையம்

February 9 , 2026 7 days 76 0
  • தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கல் சென்னையில் உள்ள கிண்டியில் நாட்டப்பட்டது.
  • உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீடித்த பெருங்கடல் வளப் பயன்பாடு மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் கீழ், இந்த சிறப்பு மையம் 14.50 கோடி செலவில் நிறுவப்பட உள்ளது.
  • இந்த மையம் கடல் ஆமைப் பாதுகாப்புக்கான அறிவியல் ஆராய்ச்சி, கண்காணிப்பு, பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகில் உள்ள ஆறு கடல் ஆமை இனங்களில் ஐந்து இனங்களைக் கொண்ட இந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் பகுதியின் கடற்கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் கடல் ஆமைகள் முட்டை இடுகின்றன.
  • இந்த முயற்சி கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில், குறிப்பாக அழிந்து வரும் சிற்றாமைகளை  (ஆலிவ் ரிட்லி) பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்