கேரள அரசு கடல் ஓத வெள்ளத்தை மாநிலம் சார்ந்தப் பேரிடராக அறிவித்துள்ளது.
கடல் ஓத வெள்ளம், வெயில் கால வெள்ளம் அல்லது ராஜ ஓத வெள்ளம் என்றும் அழைக்கப் படுகிறது என்பதோடு இது உயர்ஓதங்களின் போது தாழ்வான கடலோரப் பகுதிகளில் ஏற்படும் தற்காலிக வெள்ளப் பெருக்கு ஆகும்.
இது பலத்த காற்று, புயல்கள் மற்றும் முழு நிலவு அல்லது அமாவாசை உயர் ஓத நிகழ்வுகளின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக ஏற்படுகிறது.
இது தினமும் இரண்டு முறை நிகழ்கிறது மற்றும் முழு நிலவு மற்றும் அமாவாசை கட்டங்களில் மிகவும் கடுமையானதாகிறது.
கேரளக் கடற்கரையில், அரபிக் கடல் மட்டம் ஒரு நிலையான எல்லைக்கு மேல் உயர்ந்து, தாழ்வான பகுதிகளை குறுகிய காலத்திற்கு வெள்ளத்தில் மூழ்கடிக்கும்.
மாநில பேரிடர் மீட்பு நிதியத்தின் (SDRF) கீழ் நிதி உதவி வழங்கும் கேரளா, இந்தியாவில் முதல் முறையாக கடல் அலை வெள்ளத்தை மாநிலம் சார்ந்தப் பேரிடராக வகைப் படுத்தியுள்ளது.