கடல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு - இந்தியா மற்றும் பிரான்சு
August 24 , 2019 2316 days 845 0
ஏறத்தாழ 10 தாழ் புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள் தொகுப்புகளை மேம்படுத்தி, அவற்றை ஏவ இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
இது உலகில் பரந்த பகுதியை உள்ளடக்கும். அதிலும் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியின் மீது இது மிகுந்த கவனத்தைச் செலுத்தும். இப்பகுதியில் பிரான்ஸ் தனது ரீயூனியன் தீவுகளுடன் ஒரு உத்திசார் நலனைக் கொண்டு இருக்கின்றது.
செயற்கைக் கோளை அடிப்படையாகக் கொண்ட அடையாள அமைப்பானது
கடற் பகுதியில் நகரும் கப்பல்களின் வரம்பைக் கண்டறிந்து, அவற்றைக் கண்காணித்தல்
ஆக்கிரமிப்பு, தீவிரவாதம், திருட்டு, கடத்தல் ஆகியவற்றிற்கு எதிரான பாதுகாப்பு மற்றும் மீட்பிற்கு அதனைப் பயன்படுத்துதல்.
ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளால் கூட்டாக இணைந்து மேம்படுத்தப்பட்டுள்ள காலநிலை மற்றும் கடல் கண்காணிப்பு செயற்கைக் கோள்கள் பின்வருமாறு