பிரான்சு, பிரேசில், பெல்ஜியம், கனடா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பதினேழு நாடுகள் COP30 மாநாட்டில் கடல் சார் (தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்) சவாலில் இணைந்தன.
இந்த முன்னெடுப்பு பாரிசு உடன்படிக்கையின் கீழ் தேசியப் பருவநிலை திட்டங்களில் பெருங்கடல் சார்ந்த பருவநிலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.
பிரான்சு மற்றும் பிரேசிலால் ஆதரிக்கப்படும் ஒரு பெருங்கடல் செயற்குழு, 2030 ஆம் ஆண்டு பருவநிலை இலக்குகளில் கடல் சார் தீர்வுகளை ஒருங்கிணைக்க அரசாங்கங்களுக்கு உதவுகிறது.
கடல் சார் நடவடிக்கை தொகுப்பு பெருங்கடல் பாதுகாப்பு, பெருங்கடல் உணவு அமைப்புகள், கடல் சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கப்பல் போக்குவரத்து கார்பன் நீக்கம் மற்றும் கடலோரச் சுற்றுலா ஆகிய ஐந்து துறைகளில் கவனம் செலுத்துகிறது.
1.5°C வெப்பநிலை இலக்குக்குத் தேவையான உலகளாவிய உமிழ்வுக் குறைப்புகளில் 35% வரை பெருங்கடல்கள் வழங்க முடியும்.
இந்த முன்னெடுப்பு சதுப்புநிலங்கள், கடல்புற்கள் மற்றும் உப்புத் தன்மை கொண்ட சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட கடல் சார் கார்பன் தடங்களை ஊக்குவிக்கிறது என்பதோடு மேலும் கடல் சார் பருவநிலை நிதியில் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது.