இஸ்ரேலின் ஈலாட்டில் நடைபெற்ற "Blue Food Security: Sea the Future 2026" என்ற இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்றது.
இந்த உச்சி மாநாடு உணவுப் பாதுகாப்பு, நிலையான மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு சார் புத்தாக்கங்களில் கவனம் செலுத்தியது.
ஈலாட்டில் உள்ள தேசியக் கடல்சார் வளர்ப்பு மையம் (NCM), மீன் குஞ்சு வளர்ப்பு மேம்பாடு, குஞ்சு பொரிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பல் ஊட்ட மீன் வளர்ப்பை காட்சிப்படுத்தியது.
தொழில்நுட்ப பரிமாற்றம், நிலையான மீன்பிடி நடைமுறைகள், திறன் மேம்பாடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு அமைச்சகப் பிரகடனத்தில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டன.
கடல் சார் உணவுப் பாதுகாப்பு துறையில் உலகளாவியத் தலைவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் பங்கேற்பும் இந்த உச்சி மாநாட்டில் இடம் பெற்றது.