TNPSC Thervupettagam

கடல் சார் உயர்நிலைப் படைப் பிரிவு

August 24 , 2025 5 days 63 0
  • தமிழ்நாடு அரசானது, சென்னை வனவிலங்குப் பிரிவின் கீழ் தனது இரண்டாவது கடல் சார் மேல்நிலைப் படைப் பிரிவை அமைக்க உள்ளது.
  • மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடல்சார் சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க இராமநாதபுரத்தில் 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதல் பிரிவு நிறுவப் பட்டது.
  • சென்னை கடற்கரையில், குறிப்பாக நீலாங்கரை மற்றும் மெரினா ஆகிய ஆமைகள் வலையமைக்கும் இடங்களுக்கு இடையில் அருகி வரும் சிற்றாமை/ஆலிவ் ரெட்லே ஆமைகளைப் பாதுகாப்பதில் இந்தப் புதிய பிரிவு கவனம் செலுத்தும்.
  • கடல்சார் மேல்நிலைப் படைப் பிரிவானது கடற்கரையிலிருந்து ஐந்து கடல் மைல்களுக்குள், அங்கு நிலவும் அச்சுறுத்தல்களைக் குறைக்க ரோந்து சென்று, சட்டங்களை அமல்படுத்தும் மற்றும் அந்த நிறுவனங்களுடன் பல ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
  • 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தினை அமல்படுத்துவதற்கு இந்தப் படை ஆதரவளிக்கும்.
  • இது தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழு, இந்தியக் கடலோரக் காவல்படை, மீன்வளத் துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மீனவர் சங்கங்களுடன் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்