"India’s Blue Economy: Strategy for Harnessing Deep-Sea and Offshore Fisheries" என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
2 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) ஆழ்கடல் மீன்வளத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
உலகளாவிய உற்பத்தியில் 8% பங்களிப்புடன் இந்தியா மீன் உற்பத்தியில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதோடுசுமார் 30 மில்லியன் வாழ்வாதாரங்களை இது ஆதரிக்கிறது.
2023–24 ஆம் நிதியாண்டில் மீன்வள ஏற்றுமதி 60,523 கோடி ரூபாயை ஈட்டியது என்ற நிலையில்கண்டத் திட்டுகளுக்கு அப்பால் உள்ள ஆழ்கடல் மீன் வளமானது பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை.
EEZ ஆனது மரபார்ந்த மற்றும் மரபுசாரா கடல் வளங்களிலிருந்து 7.16 மில்லியன் டன்கள் பயன்களைக் கொண்டுள்ளது.
இங்கு 6 முக்கியத் திட்டங்களில் கொள்கைச் சீர்திருத்தம், நிறுவனத் திறன், மீன்பிடி நிறுவனங்களின் நவீனமயமாக்கல், நிலையான மேலாண்மை, நிதி மற்றும் சமூக பங்கேற்பு ஆகியவை அடங்கும்.
மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொகுப்பு அடிப்படையிலான அணுகுமுறைகள் மூலம் உள்ளடக்கிய வகையிலான மீன்பிடி நிறுவன மேம்பாட்டை அறிக்கை முன் மொழிகிறது.
இதில் முதலீட்டு மதிப்பீடுகளுடன், முதல் கட்டம் (2025–28), இரண்டாம் கட்டம் (2029–32), மற்றும் மூன்றாம் கட்டம் (2033 ஆம் ஆண்டு முதல்) என கட்டம் கட்டமாக திட்டமிடப் பட்ட செயல் திட்டமானது குறிப்பிட்டுக் காட்டப் பட்டுள்ளது.