TNPSC Thervupettagam

கடல் சார் பொருளாதாரம் குறித்த நிதி ஆயோக் அறிக்கை

October 18 , 2025 5 days 57 0
  • "India’s Blue Economy: Strategy for Harnessing Deep-Sea and Offshore Fisheries" என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • 2 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) ஆழ்கடல் மீன்வளத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • உலகளாவிய உற்பத்தியில் 8% பங்களிப்புடன் இந்தியா மீன் உற்பத்தியில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதோடு சுமார் 30 மில்லியன் வாழ்வாதாரங்களை இது ஆதரிக்கிறது.
  • 2023–24 ஆம் நிதியாண்டில் மீன்வள ஏற்றுமதி 60,523 கோடி ரூபாயை ஈட்டியது என்ற நிலையில் கண்டத் திட்டுகளுக்கு அப்பால் உள்ள ஆழ்கடல் மீன் வளமானது பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை.
  • EEZ ஆனது மரபார்ந்த மற்றும் மரபுசாரா கடல் வளங்களிலிருந்து 7.16 மில்லியன் டன்கள் பயன்களைக் கொண்டுள்ளது.
  • இங்கு 6 முக்கியத் திட்டங்களில் கொள்கைச் சீர்திருத்தம், நிறுவனத் திறன், மீன்பிடி நிறுவனங்களின்  நவீனமயமாக்கல், நிலையான மேலாண்மை, நிதி மற்றும் சமூக பங்கேற்பு ஆகியவை அடங்கும்.
  • மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொகுப்பு  அடிப்படையிலான அணுகுமுறைகள் மூலம் உள்ளடக்கிய வகையிலான மீன்பிடி நிறுவன மேம்பாட்டை அறிக்கை முன் மொழிகிறது.
  • இதில் முதலீட்டு மதிப்பீடுகளுடன், முதல் கட்டம் (2025–28), இரண்டாம் கட்டம் (2029–32), மற்றும் மூன்றாம் கட்டம் (2033 ஆம் ஆண்டு முதல்) என கட்டம் கட்டமாக திட்டமிடப் பட்ட செயல் திட்டமானது குறிப்பிட்டுக் காட்டப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்