கடல் சுத்தம் – கிரேட் பசிபிக் கழிவுப் பொருள் பகுதி
September 9 , 2018 2684 days 934 0
உலகின் மிகப்பெரிய கழிவுப்பொருள் பகுதியான பசுபிக் கடலின் மையத்தில் சுத்தம் செய்வதற்காக கலிபோர்னியா மற்றும் ஹவாய் ஆகிய பகுதிகளுக்கு இடையே மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்க கழிவுப்பொருள் சேகரிப்பு சாதனத்தை பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோவின் கடற்பகுதியில் தொடங்கப்படவிருக்கும் இத்திட்டத்தின் பெயர் சிஸ்டம் 001 ஆகும்.
இந்த மிகப்பெரிய மிதக்கும் சாதனமானது கடலை சுத்தப்படுத்துதல் என்ற லாப நோக்கில்லா நிறுவனத்தின் நிறுவனரான போயன் சிலட் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கும்போது அவருடைய வயது 18 ஆகும்.
சிஸ்டம் 001-ஐ போன்று தோராயமாக 60 சாதனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த சாதனம் 5 வருடத்தில் கிரேட் பசிபிக் கழிவுப் பொருள் பகுதியில் 50 சதவீதம் கழிவுகளை அகற்றும் என்று கடலை சுத்தப்படுத்துதல் நிறுவனம் கணித்திருக்கிறது.