இந்திய நீர்நிலைகளில் கடல்மீன் பிடித்தலை ஊக்குவிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு கடல் மீன்வளம் மீதான தேசியக் கொள்கையினை (National Policy on Marine Fisheries – NPMF) அரசு அறிவித்துள்ளது.
நீலப் புரட்சியை ஊக்குவிப்பதில் ஈடுபாடு செலுத்தும் நீல வளர்ச்சி முன்னெடுப்பினை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலை NPMF வழங்கும்.
இந்தியாவின் தற்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் நன்மைக்காக நிலையான மீன்பிடி முறை மூலம் இந்தியாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தின் கடல்வாழ் வளங்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டினை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
NPMF கொள்கையின் உத்திகளானது 7 தூண்களை அடிப்படையாகக் கொண்டது.
அவை நிலையான மேம்பாடு, மீனவர்களின் சமூக-பொருளாதார மேம்பாடு, துணை நிறுவனங்களிடையே கொள்கை, கூட்டிணைவு, தலைமுறைகளுக்கிடையேயான சமத்துவம், பாலின நீதி மற்றும் முன்னெச்சரிக்கைமிக்க அணுகுமுறை ஆகியன ஆகும்.