இந்தியாவின் வர்த்தகத்தில், அளவின் அடிப்படையில் சுமார் 95 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் சுமார் 70 சதவீதமும் கடல்சார் வழிகளில் நடைபெறுகிறது.
கடல்சார் இந்தியக் கொள்கை 2030 (MIV 2030) ஆனது 3–3.5 லட்சம் கோடி ரூபாய் திட்டமிடப்பட்ட முதலீடுகளுடன் 150க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை உள்ளடக்கி உள்ளது.
முக்கியத் துறைமுகங்கள் 2024–25 ஆம் நிதியாண்டில் தோராயமாக 855 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டன என்ற நிலையில் இது 2023–24 ஆம் நிதியாண்டில் 819 மில்லியன் டன்களாக இருந்தது.
ஆண்டிற்கு 1,400 மில்லியன் மெட்ரிக் டன்களாக (MMTPA) இருந்த இந்தியாவின் துறைமுகச் செயல் திறன் ஆனது, மேம்படுத்தப் பட்ட திறன்களுடன் 2,762 MMTPA ஆக அதிகரித்து ள்ளது.
இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI) ஆனது, 2025 ஆம் ஆண்டில் சரக்குப் போக்குவரத்து 146 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்ததாக அறிவித்துள்ளது என்ற நிலையில் இது 2014 ஆம் ஆண்டில் 18 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
கடல்சார் அமிர்த கால் கொள்கை 2047 ஆனது துறைமுகங்கள், கடலோரக் கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கப்பல் கட்டுமானத்தில் சுமார் 80 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைப் பெறத் திட்டமிடுகிறது.