ஜப்பான் கடற்படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவற்றுக்கிடையேயான கடல் சார் கூட்டாண்மைப் பயிற்சியானது அந்தமான் கடலில் நடத்தப் பட்டது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் (IOR) கடல்சார் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளும் இது போன்ற வழக்கமானப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தப் பயிற்சிகள், இந்த இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான இயங்குதிறனை மேம்படுத்துதல், கப்பல் போக்குவரத்து திறன் மற்றும் தகவல்தொடர்பு நடைமுறை ஆகியவைகளை நெறிப்படுத்துதல் போன்றவற்றை ஒரு நோக்கமாகக் கொண்டு மேற் கொள்ளப் பட்டன.