மத்திய அமைச்சரான மன்சுக் மண்டாவியா அவர்கள் “SAROD - துறைமுகங்கள்” (துறைமுகங்கள் – பிரச்சினைகளின் சுமூகமான தீர்விற்கான சமூகம்/Society for Affordable Redressal of Disputes-Ports) எனப் பெயரிடப்பட்ட, பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு குறைதீர் நடைமுறையைத் தொடங்கி வைத்துள்ளார்.
இது கடல்சார் துறையில் மத்தியஸ்தத்தின் மூலம் பிரச்சினைகளின் தீர்விற்கு ஆலோசனை வழங்கி உதவ உள்ளது.
இது தனியார் துறைமுகங்கள், களங்கள், முனையங்கள் மற்றும் சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கியமான துறைமுக அறக்கட்டளைகள், சிறிய அளவிலான துறைமுகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது
இது நெடுஞ்சாலைத் துறையில் NHAI/என்எச்ஏ என்ற அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட SAROD – சாலைகள் என்ற அமைப்பைப் போன்றே உள்ளது.
இது நியாயமான முறையில் பிரச்சினைகளுக்குக் குறித்த காலத்திற்குள் சுமூகமான தீர்வினைக் கண்டறிவதற்காக சமுதாயப் பதிவுகள் சட்டம், 1860 என்ற சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப் பட்டுள்ளது.