துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) ஆனது புது டெல்லியில் 2025 ஆம் ஆண்டு கடல்சார் நிதி உச்சி மாநாட்டினை நடத்தியது.
இந்த உச்சிமாநாடு ஆனது துறைமுகங்களில் டிஜிட்டல் சார் நிதி உள்கட்டமைப்பை மதிப்பிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும், அவற்றை முதலீட்டாளர்களுக்குத் தயாராக்குவதற்குமான நிதி சார் டிஜிட்டல் மெச்சூரிட்டி மேட்ரிக்ஸ் (FDMM) எனும் மதிப்பீட்டு கருவியினை அறிமுகப்படுத்தியது.
மூலதனச் செலவுகளைக் குறைப்பதற்கும், கப்பல் கட்டும் தளங்கள், கடலோர மையங்கள் மற்றும் உள்நாட்டு நீர்வழிகளில் நீண்டகால முதலீட்டை ஈர்ப்பதற்கும் அமைச்சகம் கடல்சார் மேம்பாட்டு நிதியை (MDF) முன்மொழிந்தது.