TNPSC Thervupettagam

கடல்சார் போக்குவரத்திற்கான உதவிகள் மசோதா 2021

August 1 , 2021 1465 days 604 0
  • பாராளுமன்றமானது 2021 ஆம் ஆண்டு கடல்சார் போக்குவரத்திற்கான உதவிகள் மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதாவானது 1927 ஆம் ஆண்டு கலங்கரை விளக்கச் சட்டத்தினை ரத்து செய்து அதற்குப் பதிலாக இதனைச் சட்டமாக்க உள்ளது.
  • இந்தியாவில் கடல்சார் போக்குவரத்திற்கான உதவிகளை மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றுக்கான ஒரு கட்டமைப்பினை இந்த மசோதா வழங்க முனைகிறது.
  • இந்த மசோதாவின் படி மாவட்டங்களுக்கான தலைமை இயக்குநர், துணைத் தலைமை இயக்குநர்கள் அல்லது இயக்குநர்கள் ஆகியோரை மத்திய அரசு நியமிக்க உள்ளது.
  • அதன் தலைமை இயக்குநர், இந்தப் போக்குவரத்திற்கான உதவிகள் தொடர்பான விசயங்களில் மத்திய அரசிற்கு அறிவுரை வழங்குவார்.
  • இதன் விதிமுறைகளானது கடற்கரையோரப் பகுதிகள், கண்டத் திட்டு மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கடல்சார் மண்டலங்கள் உட்பட ஒட்டு மொத் நாட்டிற்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்