TNPSC Thervupettagam

கடல்சார் வள அறக்கட்டளை மற்றும் மறுசீரமைப்புச் சபை

September 12 , 2025 11 days 72 0
  • கடல்சார் பல்லுயிரியலைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கடல் சார் வள அறக்கட்டளையைத் (TNMRF) தொடங்கியது.
  • TNMRF ஆனது அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் மற்றும் பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள் மற்றும் கடல்சார் புல் இனங்களின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மறு சீரமைக்கும்.
  • இந்த அறக்கட்டளையானது சுற்றுச்சூழலுக்கு உகந்தச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சார் கல்வி, பல்லுயிர்ப்பெருக்கங்களின் ஆய்வு அறிக்கை மற்றும் கடல் சார் புவியியல் தகவல் அமைப்புகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும்.
  • மீன் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு மற்றும் கடலோர கைவினைப் பொருட்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளில் மீனவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் இது நிலையான வாழ்வாதாரத்தை ஆதரிக்கும்.
  • மணாலி எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்புச் சபை (MERRC) ஆனது, அதிக சுற்றுச்சூழல் பாதிப்பு கொண்ட மணாலி-எண்ணூர் பகுதியை மீட்டெடுக்கத் தொடங்கப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எண்ணெய் கசிவுக்குப் பிறகு நிறுவப்பட்ட MERRC  பசுமைத் திட்டங்கள், நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • வெள்ளம், புயல் மற்றும் தொழில்துறை விபத்துகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு தண்டையார்பேட்டையில் ஒரு நவீன அவசரகால மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்