TNPSC Thervupettagam

கடல்சார் விலங்குகளுக்கான உதவி எண்

September 9 , 2025 17 hrs 0 min 36 0
  • ரீஃப்வாட்ச் கடல் வளங்காப்பு நிறுவனத்தினால் தமிழ்நாட்டில் மத்ஸ்யா என்ற புதிய கடல் சார் தொலை மருத்துவ உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, மாநிலத்தின் கடற்கரையோரத்தில் சிக்கித் தவிக்கும் அல்லது காயமடைந்த கடல் வாழ் விலங்குகளை மீட்கும் நடவடிக்கைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒரு கடல் வாழ் விலங்குகள், காயம், நோய் அல்லது அவற்றின் இயக்கத்தின் திசைத் திருப்பல் காரணமாக கடலுக்குத் திரும்ப முடியாதபோது கரை ஒதுங்குகின்றன.
  • 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஆலிவ் ரெட்லே/சிற்றாமைகள் இறப்புக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக, அவற்றின் பிரேதப் பரிசோதனைகளை நடத்துவதில் ரீஃப்வாட்ச் வனத்துறைக்கு உதவியது.
  • மத்ஸ்யா, +91 6360249764 என்ற உதவி எண் மூலம் மீனவர்கள் மற்றும் உள்ளூர் உதவியாளர்களுக்கு தொலைதூர விலங்கு நல ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது.
  • கோவா மற்றும் கர்நாடகாவில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ரீஃப்வாட்ச் அமைப்பு, 494 கடல்சார் விலங்குகள் கரை ஒதுங்குவதைத் தடுப்பது தொடர்பான முந்தைய நடவடிக்கைப் பணிகளை மத்ஸ்யா உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்