டாடா பவர் என்ற நிறுவனமானது ஜெர்மனியைச் சேர்ந்த RWE ரினிவபிள் என்ற ஒரு நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கடல்பரப்பு காற்றாலைகளை நிறுவச் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்த நிறுவனங்களும் கையெழுத்து போட்டுள்ளன.
2030 ஆம் ஆண்டிற்குள் 30 ஜிகாவாட் திறனுடைய கடல்பரப்பு காற்றாலையை நிறுவும் இலக்கை அடைவது குறித்த இந்தியாவின் அறிவிப்பிற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட உள்ளது.