Long March 10B ஏவுகலத்தைப் பயன்படுத்தி, கடல்வழி மறுபயன்பாட்டு ஏவுகல உந்து கலன் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
நிலை பிரிப்பிற்குப் பிறகு, உந்துகலன் செங்குத்தாகத் திரும்பி, வலை அடிப்படையில் ஆன தரையிறங்கும் அமைப்பைப் பயன்படுத்தி கடலோரத் தளத்தில் மீட்கப் பட்டது.
இது சுற்றுப்பாதை அளவிலான ஏவுகல உந்துகலனை சீனா வெற்றிகரமாக மீட்ட முதல் நிகழ்வாகும்.
சீன ஏவு வாகனத் தொழில்நுட்பக் கழகம் (CALT) உருவாக்கியுள்ள இந்த Long March 10B ஏவுகலம், 16 டன்களுக்கும் அதிகமான சுமைகளை தாழ்வான புவி சுற்றுப்பாதைக்கு (LEO) கொண்டு செல்லும் திறன் கொண்டது.
மறுபயன்பாட்டு ஏவுகலத் தொழில்நுட்பமானது, ஏவுதல் செலவுகளைக் குறைப்பதையும், சீனாவின் எதிர்கால வணிக ரீதியான செயற்கைக்கோள் மற்றும் நிலவுப் பயணங்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.