இந்தியாவில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான சட்டபூர்வ அடிப்படையை உருவாக்கிய கடவுச்சீட்டுகள் சட்டம், 1967 இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப் படுகிறது.
கடவுச்சீட்டு சேவை திட்டம் பதிப்பு 2.0 மூலம் மின்னணு-கடவுச்சீட்டுகள், அலைபேசி கடவுச்சீட்டு சேவை வாகனங்கள், கடவுச்சீட்டு சேவை மையங்கள் (PSKs) மற்றும் தபால் அலுவலக கடவுச்சீட்டு சேவை மையங்கள் (POPSKs) ஆகியவற்றின் மூலம் கடவுச்சீட்டு சேவைகளை மேம்படுத்தியுள்ளது.
கடவுச்சீட்டு சேவை வலையமைப்பானது 2014 ஆம் ஆண்டில் 77 கடவுச்சீட்டு சேவை மையங்களில் இருந்து தற்போது நாடு முழுவதும் 545 கடவுச்சீட்டு சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலக கடவுச்சீட்டு சேவை மையங்களாக விரிவடைந்துள்ளது.
இந்தியா முழுவதும் கடவுச்சீட்டு சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களின் பங்களிப்பை இந்நாள் அங்கீகரிக்கிறது.
திறமையான, பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட கடவுச்சீட்டு சேவைகளை வழங்குவதில் வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.