TNPSC Thervupettagam

கடுமையான கொழுப்புசார் நோய்களுக்கான மரபணு சிகிச்சை

December 10 , 2025 15 hrs 0 min 15 0
  • இந்தச் சிகிச்சையானது, ANGPTL3 (ஆஞ்சியோபொய்டின் போன்ற 3) மரபணுவை இலக்காக வைத்து, இரத்தத்தில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரதம் (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவை ஒழுங்குபடுத்துகிறது.
  • கொழுப்பு என்பது இரத்தத்தில் உள்ள கொழுப்பு போன்ற பொருள் ஆகும்.
  • அதிக அளவு LDL (குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரதம்) ஆனது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதோடு மேலும் அதிக ட்ரைகிளிசரைடுகள் இருதய நோய் சார்ந்த ஆபத்தையும் அதிகரிக்கின்றன.
  • 15 நோயாளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக அளவு மருந்தானது LDL கொழுப்பை 50% என்றும் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை 55% என்றும் குறைத்தது.
  • இந்த அணுகுமுறை, இயற்கையாகவே செயலற்ற ANGPTL3 மரபணுக்கள் மற்றும் உடல் நலப் பிரச்சினைகள் இல்லாமல் குறைந்த அளவு கொழுப்பைக் கொண்ட 250 பேரில் ஒருவருக்கு ஏற்படும் அரிய இயற்கைப் பிறழ்வு முறையை கொண்டு உருவாக்கப் பட்டு உள்ளது.
  • இந்தச் சிகிச்சையானது, கொழுப்பு மேலாண்மையின் முக்கியத் தளமான கல்லீரல் செல்களை மாற்றியமைக்க CRISPR-Cas9 மரபணு திருத்தத்தைப் பயன்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்