மாநில அரசானது, தமிழ்நாடு 2025 ஆம் ஆண்டு கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் (கடும் கட்டாய நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டத்தினை அறிவித்துள்ளது.
இது கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் சிறு கடன்களை கட்டாயமாக வசூலிப்பதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சட்டமானது ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜூன் 09 ஆம் தேதியன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றது.
இந்தச் சட்டமானது, நலிவடைந்த மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் தனிநபர்களை மிகக் குறிப்பாக விவசாயிகள், பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் செயல்படும் சிறு கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் போன்ற கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் கடன்களைக் கட்டாயமாக வசூலிப்பதில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.
கடன் வாங்குபவருக்கு எதிரான கட்டாய/அராஜக வசூலிப்பு நடவடிக்கை தொடர்பான சட்டத்தின் விதிகள் ஆனது, இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களுக்குப் பொருந்தும்.
சிறுகடன் என்பது 3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் உள்ள ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் கடனைக் குறிக்கிறது.
ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் அவர்களின் திருமணமாகாத மகன் மற்றும் மகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு தனிப்பட்ட குடும்ப அலகாகும்.
கடன் வாங்குபவர் என்பவர் ஒரு தனிநபர் அல்லது தனிநபர்களின் குழு அல்லது ஒரு சுய உதவிக் குழு அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுவைக் குறிக்கிறது.
இந்தச் சட்டத்தின் 20வது பிரிவானது, ஒரு கட்டாய வசூல் நடவடிக்கை எது என்பதையும் பட்டியலிடுகிறது.