October 5 , 2025
5 days
86
- மத்திய அரசானது, சமக்ர சிக்சா அபியான் (ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வித் திட்டம்) மூலம் கல்வி உரிமை (இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்) உரிமைகளின் கீழ் 538.39 கோடி ரூபாய் நிதியை தொடங்கியுள்ளது.
- இந்தத் தொகையில் 2024-25 ஆம் ஆண்டிற்கான 362 கோடி ரூபாயும், 2025-26 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையான 175.59 கோடி ரூபாயும் அடங்கும்.
- தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் 25% இடங்கள் ஆனது கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விளிம்பு நிலையில் உள்ள குழுவினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில், சமக்ர சிக்சா திட்டத்திலிருந்து RTE (கல்வி உரிமை) திட்டத்திற்கு நிதியளிப்பதைக் குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- இதன் பின்னர், தமிழ்நாடு மாநில அரசானது உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு விடுப்பு மனுவை (SLP) தாக்கல் செய்த நிலையில், உச்ச நீதிமன்றமானது மத்திய அரசு தனது நிதிப் பங்கை விடுவிக்கக் கோரி உத்தரவிட்டது.

Post Views:
86