கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2021 என்னும் ஒரு கடல்சார் பயிற்சியில் ஐ.என்.எஸ் தால்வார் எனும் கப்பல் பங்கேற்றது.
இந்த கடற்படைப் பயிற்சியானது ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையினூடே நடத்தப் படுகிறது.
இது ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் கடற்படைப் பயிற்சியாகும்.
மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க ஆசியப் பகுதிகளில் வட்டார மற்றும் தேசியக் கடல்சார் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக வேண்டி இந்தப் பயிற்சியானது மேற்கொள்ளப்படுகிறது.