உலகெங்கிலும் உள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில் உலகின் மிகவும் பெரிய, நேரடியான கடிகார ஒப்பீட்டை நிறைவு செய்துள்ளனர்.
இது ஸ்ட்ரோண்டியம்-87 (Sr), ய்ட்டர்பியம்-171 (Yb), இரண்டு நிலைகளில் (Yb⁺ E2 மற்றும் Yb⁺ E3) மின்னூட்டம் பெற்ற ய்ட்டர்பியம்-171 அயனிகள், மின்னூட்டம் பெற்ற ஸ்ட்ரோண்டியம்-88 (Sr⁺), மற்றும் இண்டியம்-115 அயனிகள் (In⁺) ஆகிய ஐந்து முக்கிய அணுக்களை அடிப்படையாகக் கொண்ட சுமார் 10 ஒளியியல் கடிகாரங்களை அதில் உள்ளடக்கியது.
இந்தக் கடிகாரங்கள் ஆனது பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஐக்கியப் பேரரசு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள ஆறு தேசிய அளவியல் நிறுவனங்களில் அமைந்திருந்தன.
ஒரு வினாடியின் கால அளவானது, தற்போது சீசியம் (Cs) அணு கடிகாரங்களால் வரையறுக்கப் படுகிறது.
சீரொளிக் கற்றையானது, சில பில்லியன்களில் ஒரு பங்கை வழங்க அல்லது பெற ஒரு வினாடியை அளவிடுவதற்காக இந்த சாதனங்களில் Cs அணுக்களால் வெளிப்படும் கதிர்வீச்சை 'கணக்கிடுகின்றன'.
2030 ஆம் ஆண்டில் உலகின் புதிய சீர் தர நேரமாக Cs வகை அணுக் கடிகாரங்களுக்கு மாற்றாக இந்த ஒளியிழைக் கடிகாரங்கள் அமையும் என்று அறிவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஒரு வினாடியின் வரையறையானது சராசரிச் சூரிய நாளில் 86,400 நாட்களில் ஒரு பங்காக இருந்தது.
1956 ஆம் ஆண்டில், ஒரு வினாடியானது 1900 ஆம் ஆண்டு ஜனவரி 0 முதல் பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொண்ட நேரத்தில் 31,556,925.9747 நாளில் ஒரு பங்காக மாறியது.
Cs அணு கடிகாரம் ஆனது ஒவ்வொரு 300 மில்லியன் ஆண்டுகளுக்கும் ஒரு வினாடியை மட்டுமே இழக்கிறது.