TNPSC Thervupettagam

கண்டெய்னர் துறைமுகச் செயல்திறன் குறியீடு 2025

June 14 , 2026 15 hrs 0 min 21 0
  • மகாராஷ்டிராவில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) ஆனது இந்தியாவின் தலைசிறந்த கண்டெய்னர் துறைமுகமாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளதுடன், 2025-ஆம் ஆண்டின் கண்டெய்னர் துறைமுகச் செயல்திறன் குறியீட்டில் (CPPI) உலகளவில் 22-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • CPPI 2025 ஆம் ஆண்டு அறிக்கையின்படி JNPA இந்தியாவின் சிறப்பாக செயல்படும் சரக்குப் பெட்டகத் துறைமுகமாகும்.
  • CPPI அறிக்கையானது உலக வங்கி மற்றும் S&P Global Market Intelligence ஆகியவற்றால் கூட்டாக வெளியிடப்படுகிறது.
  • இது சரக்குகளைக் கையாளும் வேகம், கப்பல்கள் வந்து செல்லும் நேரம் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் துறைமுகத்தின் செயல்திறனை அளவிடுகிறது.
  • இந்தத் தரவரிசையில் இடம்பிடித்துள்ள மற்ற இந்தியத் துறைமுகங்களில் பிபாவாவ் (28-வது இடம்), முந்த்ரா (30-வது இடம்) மற்றும் விசாகப்பட்டினம் (104-வது இடம்) ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்