இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுக (UPI) வலையமைப்பில் இணைந்த எட்டாவது நாடாக கத்தார் மாறியுள்ளது.
QR குறியீடு அடிப்படையிலான UPI கட்டணங்களைச் செயல்படுத்துவதற்காக கத்தார் தேசிய வங்கியானது NPCI சர்வதேச கொடுப்பனவுகள் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்தப் புதிய அமைப்பானது இந்தியப் பயணிகள் கத்தாரில் உள்ள கடைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் உடனடியாக டிஜிட்டல் வழியில் பணம் செலுத்த அனுமதிக்கிறது.
UPI அமைப்பினைப் பயன்படுத்தும் பிற நாடுகளில் பூடான், பிரான்சு, மொரீஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அடங்கும்.