TNPSC Thervupettagam

கத்புட்லி — இராஜஸ்தானின் பாரம்பரியப் பொம்மைக் கலை

January 17 , 2026 5 days 37 0
  • மரப் பொம்மை (காத் = மரம், புட்லி = பொம்மை) என்று பொருள்படும் கத்புட்லி, இராஜஸ்தானின் பழமையான நாட்டுப்புறக் கலை வடிவங்களில் ஒன்றாகும்.
  • ஜெய்ப்பூரில் உள்ள கத்புட்லி நகரில் சுமார் 250 குடும்பங்கள் இந்தப் பொம்மைகளை உருவாக்கிப் பாதுகாத்து, பிரகாசமான ஆடைகளைத் தைத்து, உணர்வு வெளிப்பாடு மிக்க முகங்களை வரைகின்றனர்.
  • இராஜபுத்திர மன்னர்கள், போர் வீரர்கள், நாட்டுப்புற நாயகர்கள் மற்றும் நெறிமுறைக் கதைகளை விவரிக்க நாடோடி/பயணக் கலைஞர்களால் பொம்மலாட்டங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
  • இராஜஸ்தானின் கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளத்தைப் பிரதிபலிக்கும் இந்த நிகழ்ச்சிகளில் சரங்கள், நாட்டுப்புற இசை மற்றும் தாளக் கதைகள் இடம் பெறுகின்றன.
  • கத்புட்லிகள் உலகெங்கிலும் உள்ள உள்ளூர் வீடுகள், கலாச்சாரக் கண்காட்சிகள் மற்றும் மேடைகளில் காட்சிப் படுத்தப்படுகின்றன என்பதோடு இது பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்