அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் கனிம உற்பத்தியை 200 சதவீதம் உயர்த்த நிலக்கரித் தொழிற்துறைக்கு சுரங்க மற்றும் நிலக்கரி அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.
அவர் தேசியக் கனிம ஆய்வு அறக்கட்டளையின் செலவிடப்படாத ரூ.1500 கோடியைப் பயன்படுத்த அவர்களை அழைத்தார்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் சுரங்கத் துறை ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது.
தேசியக் கனிம கொள்கை 2019 ஆனது நிதி தொகுப்பு, ஏலத்தின் போது முதல் முறை மறுக்கும் உரிமை போன்ற பல்வேறு சலுகைகள் மூலம் தனியார் முதலீட்டை ஈர்க்க முன்மொழிகிறது.