அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளிலிருந்து மணல் மற்றும் பிற கனிமங்களை அகழ்வதை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளைத் திருத்தியுள்ளது.
அனுமதி பெற்றவர்கள், விண்ணப்பக் கட்டணத்துடன், உரிமைத் தொகையைப் போல இரண்டு மடங்கு தொகையைத் திரும்பப் பெறக் கூடிய வகையிலான பாதுகாப்பு வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும்.
நிபந்தனைகள் மீறப்பட்டால், மாவட்ட ஆட்சியர்கள் சுரங்க அனுமதியை ரத்து செய்து, கூடுதலாக தேவைப்படும் கட்டணம் மற்றும் சீரமைப்புச் செலவுகளை வசூலிக்கலாம்.
அனுமதி காலம் முடிந்த பிறகு அல்லது அனுமதிக்கப்பட்ட அளவு தீர்ந்த பிறகு, அதிகாரிகள் இணக்கத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப பாதுகாப்பு வைப்புத் தொகையைத் திரும்ப வழங்குவார்கள்.
அதிகப்படியான சுரங்கப் பணிகள் அல்லது சேதங்களுக்கான செலவுகள், அவை பாதுகாப்பு வைப்புத் தொகையை விட அதிகமாக இருந்தால், 1890 ஆம் ஆண்டு வருவாய் மீட்புச் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும்.