சுரங்க குத்தகை விதிகளை எளிமையாக்குவதற்காக மத்திய சுரங்க அமைச்சகம் கனிமச் சலுகை விதிகளில் திருத்தங்களை அறிவித்துள்ளது.
இது ஆழமான கனிமங்களின் சுரங்க குத்தகை அல்லது கலப்பு உரிமம் வைத்து இருப்பவர்களுக்கு, அருகிலுள்ள பகுதிகளை ஒருமுறை சேர்த்துக் கொள்ள அனுமதிக்கிறது.
ஏற்கனவே உள்ள சுரங்க குத்தகையில் சிறு கனிமங்கள் உட்பட தொடர்புடைய பிற கனிமங்களைச் சேர்க்க இது வழிவகை செய்கிறது.
மாநில அரசு, விண்ணப்பம் செய்த 30 நாட்களுக்குள் இத்தகையச் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
2025-ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை) சட்டத்திற்கு முன்னதாக, சிறு கனிமங்களுக்காக வழங்கப்பட்ட குத்தகைகளில் முக்கிய கனிமங்களைச் சேர்ப்பதற்கான விதிகளையும் இது வழங்குகிறது.