October 3 , 2025
7 days
89
- கன்னியாகுமரி நன்னாரியானது புவிசார் குறியீட்டு பெறுவதற்காக முன்மொழியப் பட்டுள்ளது.
- இது அதன் குளிர்ச்சியூட்டும் பண்புகள் மற்றும் வாய்ப் புண்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான அதன் பாரம்பரியப் பயன்பாட்டிற்காக மதிப்புமிக்க ஒரு மூலிகையாக விளங்கும் நன்னாரிக்குப் பெயர் பெற்றது கன்னியாகுமரி மாவட்டம் ஆகும்.
- இந்த நன்னாரியின் வேர் ஆனது, வழக்கமான நன்னாரியை விட தடிமனாகவும், நறுமணமாகவும், ஆழ்ந்த நிறத்திலும் உள்ளது, மேலும் இது வெயிலில் உலர்த்தப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, மருத்துவ மற்றும் சமையல் பயன்பாட்டிற்காகப் பதப்படுத்தப் படுகிறது.
- தென்மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கனி பழங்குடியினர் பாரம்பரியமாக நன்னாரியை (ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ்) சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இரத்தச் சுத்திகரிப்பு, உடல் குளிரூட்டி மற்றும் செரிமான உதவிக் காரணியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
Post Views:
89