இது பள்ளிப்படிப்பைப் பெறாத இந்திய இளம்வயது சிறுமிகளை வெளிக் கொணர்ந்து முறையான கல்வி மற்றும் திறன் முறைகளுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான ஒரு பிரச்சாரமாகும்.
பள்ளிகளில் இளம்பருவ சிறுமிகளின் (11 முதல் 14 வயது சிறுமிகள்) சேர்க்கை மற்றும் தக்க வைப்பு எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதை இப்பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பேடி பச்சாவ் பேடி பத்தாவ் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்படும்.