TNPSC Thervupettagam

கன்ஹா புலிகள் வளங்காப்பகம் 2025

June 21 , 2025 11 days 40 0
  • உத்தரகாண்டின் டேஹ்ராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது, "இந்தியாவின் புலிகள் வாழ்விடங்களில் உள்ள குளம்பு கால் கொண்ட இனங்களின் நிலை" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கன்ஹா புலிகள் வளங்காப்பகம் (KTR) ஆனது, அங்கிலேட்டுகளின் அல்லது குளம்புக் கால்கள் கொண்ட தாவரம் உண்ணும் இனங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் பெரும் முன்னணிப் புலி வாழ்விடமாக உருவெடுத்துள்ளது.
  • இந்த ஒரு அறிக்கையின்படி, "கன்ஹா புலிகள் வளங்காப்பகம் ஆனது இந்தியாவின் முக்கியப் புலிகள் வளங்காப்பகங்களில் அதிக அங்கிலேட்டுகளின் எண்ணிக்கையை (1,02,485) கொண்டுள்ளது."
  • மொத்த உயிரினங்களின் நிறையானது 12.6 மில்லியன் கிலோகிராம்களைத் தாண்டி உள்ளது என்பதோடு இது கன்ஹா வளங்காப்பகத்தினை நாட்டின் மிகவும் இரை வளம் நிறைந்த புலி வாழ்விடமாக மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்