கர்நாடகாவில் உள்ள கப்படகுடா வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றி மத்திய அரசு சுற்றுச்சூழல் தாங்குதிறன் மண்டலத்தினை (ESZ) அறிவித்துள்ளது.
அதன் ஒரு தனித்துவமான பல்லுயிர்ப் பெருக்கத்தின் காரணமாக இது பெரும்பாலும் "வடக்கு கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள்" என்று குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சரணாலயத்தில் சுமார் 400 வகையான மருத்துவ தாவரங்கள் உள்ளது மற்றும் பல்வேறு வகையான காய்ந்த புதர்கள் மற்றும் இலையுதிர் தாவரங்களைக் கொண்டு உள்ளது.
அதன் சுற்றுச்சூழல் மதிப்பைத் தவிர, இந்த மலைகளில் ஆங்காங்கே காணப்படும் பல பழங்கால கோயில்களின் இடிபாடுகள் அதன் கலாச்சாரப் பாரம்பரியத்தை நன்கு பிரதிபலிக்கின்றதுடன் கப்படகுடா சரணாலயம் ஒரு வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.