தமிழக நிதியமைச்சர் மாநிலத்தின் முதல் ‘2025 ஆம் ஆண்டு கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கையினை’ வெளியிட்டுள்ளார்.
இந்தக் கொள்கையானது, கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு, கப்பலின் மூடக உற்பத்தி மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தியில் முதலீடு மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் கப்பல் கட்டும் சந்தையில் மிக கணிசமான பங்கைக் கைப்பற்றுவதற்கு மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்ற நிலையில் இது 2033 ஆம் ஆண்டிற்குள் 8 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் மற்றும் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தொழில்துறைகள் விரைவில் நிறுவப் படும்.