கப்பல் கட்டும் தொழிலுக்கான நிதி உதவித் திட்ட வழிகாட்டுதல்கள் 2025
January 1 , 2026 8 days 89 0
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) ஆனது கப்பல் கட்டும் தொழிலுக்கான நிதி உதவித் திட்டம் (SBFAS) மற்றும் கப்பல் கட்டும் துறை மேம்பாட்டுத் திட்டம் (SbDS) ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது.
இந்தியாவின் உள்நாட்டுக் கப்பல் கட்டும் தொழில் திறன் மற்றும் உலகளாவியப் போட்டித் தன்மையை வலுப்படுத்துவதற்காக இந்த இரண்டு திட்டங்களும் மொத்தம் 44,700 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
SBFAS திட்டத்தின் கீழ், 24,736 கோடி ரூபாய் என்ற மொத்த நிதி ஒதுக்கீட்டுடன் கப்பல் வகையின் அடிப்படையில் ஒரு கப்பலுக்கு 15%–25% நிதி உதவி வழங்கப்படும்.
SBFAS ஆனது இந்தியக் கப்பல் உடைப்புத் தளங்களில் கப்பல்களை அகற்றும் கப்பல் உரிமையாளர்களுக்கு பயனற்ற கழிவுப் பொருட்களின் மதிப்பில் சுமார் 40% வழங்கும் கப்பல் உடைப்பு கடன் வசதியையும் அறிமுகப்படுத்துகிறது.
19,989 கோடி ரூபாய் செலவினத்துடன் கூடிய SbDS, கப்பல் கட்டும் தளங்கள், பசுமைக் கப்பல் கட்டும் குழுக்கள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி உள்கட்டமைப்பை நவீனமய மாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
இரண்டு திட்டங்களும் 2036 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும், என்பதோடு இது கொள்கையளவில் 2047 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட திட்டமிடப் பட்டுள்ளது.