TNPSC Thervupettagam

கப்பல்களின் மறு சுழற்சிக்கான தேசிய ஆணையம்

October 18 , 2020 1752 days 651 0
  • மத்திய அரசானது கப்பலின் பொது இயக்குநரகத்தை (directorate general of shipping) கப்பல்களின் மறுசுழற்சிக்கான தேசிய ஆணையமாக அறிவிப்பதற்கு வேண்டி ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிவிக்கையானது கப்பல்களின் மறுசுழற்சிச் சட்டம், 2019 என்ற சட்டத்தின் கீழ் வெளியிடப் பட்டுள்ளது.
  • இது நாட்டில் கப்பல் மறுசுழற்சி தொடர்பான அனைத்துவித நடவடிக்கைகளையும் நிர்வகித்து, மேற்பார்வையிடுகின்ற மற்றும் கண்காணிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு தலைமை அமைப்பாகும்.
  • இது கப்பல் மறுசுழற்சி கள முதலாளிகள் மற்றும் மாநில அரசுகள் ஆகியோருக்குத் தேவைப்படும் பல்வேறு ஒப்புதல்களை அளிப்பதற்கான ஒரு உயர்மட்ட ஆணையமாக செயல்படவுள்ளது.
  • உலகில் மிகப்பெரிய கப்பல் உடைப்பைக் கொண்டுள்ள நாடு இந்தியா ஆகும்.
  • நதியா ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 70 இலட்சம் டன் அளவில் மறுசுழற்சி செய்கின்றது. இதற்கு அடுத்து வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை மிகப்பெரிய கப்பல் உடைப்பாளர் நாடாக விளங்குகின்றன.
  • கப்பல் மறுசுழற்சிச் சட்டம், 2019 என்ற சட்டம் இயற்றப்பட்டதன் மூலம், கப்பல் மறுசுழற்சிக்கான ஹாங்காங் பிரகடனத்துடன் இந்தியா இணங்கியுள்ளது.

கப்பல் மறுசுழற்சி குறித்த ஒப்பந்தம்

  • சர்வதேச கடல்சார் அமைப்பானது (IMO - International Maritime Organization) 2009 ஆம் ஆண்டில் கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மறுசுழற்சிக்கான ஹாங்காங் சர்வதேசப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
  • ஆனால் இந்தப் பிரகடனம் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. ஏனெனில் இது  15 நாடுகளினால் இன்னமும் அங்கீகரிக்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்