TNPSC Thervupettagam

கப்பல்கள் உடைப்பு மீதான மசோதா - 2019

December 12 , 2019 2074 days 696 0
  • இந்தியாவில் பாதுகாப்பான முறையில் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கப்பல்களை உடைப்பதற்கான ‘கப்பல்கள் உடைப்பு மீதான மசோதா - 2019’ என்பதனை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • இது தற்போதுள்ள கப்பல் உடைப்பு நெறிமுறை (திருத்தப்பட்டது), 2013 மற்றும் 2009 ஆம் ஆண்டின் ஹாங்காங் ஒப்பந்தத்தின் விதிகள் ஆகியவற்றை இணைக்கின்றது.
  • இந்தியாவில் உடைக்கப்பட வேண்டிய கப்பல்கள் ஹாங்காங் ஒப்பந்தத்தின் படி, ‘உடைப்பதற்கான தயார்நிலைச் சான்றிதழைப்’ பெற வேண்டும்.

முக்கிய அம்சங்கள்

  • இது ஆலங் (குஜராத்), மும்பைத் துறைமுகம், கொல்கத்தா துறைமுகம் மற்றும் அழிக்கல் (கேரளா) ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்தியாவின் கப்பல்கள் உடைப்பு ஆலைகளின் நிறுவன மதிப்பை உயர்த்தும்.
  • நாட்டின் இரண்டாம் நிலை எஃகுத் தேவைகளில் 10% எஃகுத் தேவை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் இதன் மூலம் பூர்த்தி செய்யப்படும்.
  • இரண்டாம் நிலை எஃகு என்பது கப்பல்களை உடைப்பதன் மூலம் கிடைப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்