2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று அமெரிக்கத் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அவர்கள் அமெரிக்காவின் முதல் பெண் தற்காலிக ஜனாதிபதியாக ஒரு மணி நேரம் மற்றும் 25 நிமிடங்களுக்குப் பதவியேற்றார்.
அமெரிக்காவின் 250 ஆண்டு கால வரலாற்றில் ஜனாதிபதிக்கான அதிகாரங்களைத் தற்போது அடைந்த முதலாவது பெண் கமலாவே ஆவார்.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் இரண்டாவது அதிகாரம் மிக்கப் பொறுப்பினை வகிக்கும் முதல் பெண், முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர், முதல் ஆசிய அமெரிக்கர் மற்றும் முதல் இந்திய அமெரிக்கர் ஆவார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மயக்க மருந்தின் கீழ் ஒரு வழக்கமான கொலோனோஸ்கோபி என்ற சிகிச்சையினை மேற்கொண்டதால் அவர் தற்காலிகமாக ஹாரிஸிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார்.