ஜம்மு & காஷ்மீரின் ரியாஷி மாவட்டத்தில் பாயும் அஞ்சி நதி மீது அமைக்கப்பட உள்ள நாட்டின் முதலாவது கம்பிவடத்தினால் ஆன ஒரு பாலத்தின் புதிய புகைப்படங்களை இந்திய இரயில்வே பகிர்ந்துள்ளது.
கட்டுமான நிலையிலுள்ள அஞ்சி காத் பாலமானது உதாம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா இரயில் இணைப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
இது இரயில் இணைப்பின் மூலம் கத்ரா மற்றும் ரியாஷி பகுதிகளை இணைக்கும்.
இந்தப் பாலமானது ஆற்றுப்படுகைக்கு மேல் 331 மீ உயரத்தில் அமைய உள்ளது.