தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையானது கீழ் கோத்தகிரியில் உள்ள கரிக்கியூர் பாறை ஓவியங்கள் தளம் குறித்த தகவல்களை ஆவணப்படுத்தும் புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளது.
உதகமண்டலத்தில் "The Nilgiris Archaeology" என்ற தலைப்பிலான மற்றொரு புத்தக வெளியீட்டின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது யாக்கை பாரம்பரிய அறக்கட்டளையால் தொகுக்கப் பட்டது
இந்தப் புதிய புத்தகம் ஆனது தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்கள் குறித்த நான்கு ஆண்டு ஆவணப்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தத் திட்டம் இந்த மாநிலம் முழுவதும் உள்ள பாறை ஓவியம், புதைவிடங்கள், கற் திட்டைகள், நடுகற்கள், சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளைப் பதிவு செய்கிறது.