கேரளாவில் உள்ள கரிம்புழா வனவிலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்ட விலங்கின கணக்கெடுப்பில், அந்த சரணாலயத்தில் பல புதிய இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தக் கணக்கெடுப்பில் 171 பறவை இனங்கள், 177 வண்ணத்துப்பூச்சி இனங்கள் மற்றும் 42 தட்டான் இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன; இவற்றில் பல இனங்கள் முதல் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய சேர்க்கைகளுடன், தற்போது இந்தச் சரணாலயத்தில் 247 பறவை இனங்கள், 223 வண்ணத்துப்பூச்சி இனங்கள் மற்றும் 63 தட்டான் இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
கரிம்புழா வனவிலங்கு சரணாலயம், நீலகிரியின் மேற்குச் சரிவுகளில், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது.
இந்தச் சரணாலயத்திற்கு சாளியாறு ஆற்றின் துணை நதியான கரிம்புழா ஆற்றின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.