பெண்களின் மகப்பேறு வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் உரிமையை அனுமதிக்கும் மற்றும் கருக்கலைப்பை குற்றமற்றதாக அறிவிக்கக் கோரும் நீதிப் பேராணையை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
1971 ஆம் ஆண்டின் மருத்துவக் கருக் கலைப்புச் சட்டத்தின் படி (Medical Termination of Pregnancy), இந்தியாவில் கருத்தரித்து 20 வாரங்களுக்குப் பின்பு கருவைக் கலைக்க அனுமதிக்கப் படுவதில்லை.
MTP சட்டமானது திருமணமானப் பெண்களை அவர்களின் “திட்டமிடப்படாத மற்றும் தேவையற்ற கர்ப்பத்தை” கலைக்க அனுமதிப்பதன் மூலம் அவர்களைப் பாதுகாக்கின்றது. ஆனால் இது திருமணமாகாத பெண்களுக்கு நீட்டிக்கப்படவில்லை.