TNPSC Thervupettagam

கருங்கழுத்துக் கொக்குத் திருவிழா – லடாக்

August 18 , 2026 13 hrs 0 min 34 0
  • அச்சுறுத்தலுக்கு உள்ளான இந்த இனத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக லடாக் தனது முதல் கருங்கழுத்துக் கொக்குத் திருவிழாவை நடத்துகிறது.
  • இந்த திருவிழா லடாக்கில் நடைபெறுகிறது, அங்குள்ள சாங்தாங் குளிர் வனவிலங்கு சரணாலயம் மட்டுமே இந்தியாவில் கருங்கழுத்துக் கொக்குகளின் ஒரே இனப்பெருக்க மையமாக உள்ளது.
  • இந்தக் கொக்குகள் கிழக்கு லடாக்கின் சாங்தாங் பகுதியில் உள்ள சோ கர் மற்றும் ஹன்லே சதுப்பு நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,500–5,000 மீட்டர் உயரத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.
  • கருங்கழுத்துக் கொக்கு (க்ரூஸ் நிக்ரிகால்லிஸ்) உலகின் ஒரே அதிஉயரப் பகுதியில் வாழும் கொக்கு இனமாகும், மேலும் இது IUCN செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாக உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது லடாக்கின் மாநிலப் பறவையாகும், மேலும் அப்பகுதியில் இது புனிதமானதாகக் கருதப்படுகிறது.
  • இந்தியா, பூட்டான், நேபாளம் மற்றும் சீனா முழுவதும் சுமார் 16,000 கருங்கழுத்துக் கொக்குகள் காணப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்