கருங்காய்ச்சலுக்கு புதிய வகை வைரஸ் காரணம் – விஞ்ஞானிகள்
October 29 , 2017 2755 days 1050 0
கருங்காய்ச்சலின் (காலா-அஸார்) நிலைத்தன்மைக்கு லெப்சே என்எல்வி1 (Lepsey NLV1) என்ற இதற்கு முன் அறியப்படாத புதிய வகை வைரஸ் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எனினும், ஒட்டுண்ணிகள் எப்படி தொற்றுகிறது என்றும் உடலின் உள்ளே எப்படி மறைந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் விஞ்ஞானிகள் இன்னும் தெளிவாக கண்டறியவில்லை.
கருங்காய்ச்சல் (காலா-அஸார்) விசரல் வெஷ் மேனியாசிஸ் (Visceral leishmaniasis - VL) என்று அழைக்கப்படுகிறது. இது லெஷ்மேனியா முன்னுயிரி (Protozoan) ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது.
இது பாதிக்கப்பட்ட மணல் கொசுக்களால் மனிதர்களுக்குப் பரவுகிறது.
இது உடல் எடையிழப்பு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், காய்ச்சல் மற்றும் இரத்த சோகை போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மைகளைக் கொண்டது.
இந்த ஒட்டுண்ணிகளானது சிகிச்சை அளிக்காவிட்டால், கல்லீரல் மண்ணீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவற்றிற்குள் ஊடுருவி மரணத்தை ஏற்படுத்திவிடும்.
இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நான்கு நாடுகளில் உள்ள 119 மாவட்டங்களில் இந்த நோய் பரவி இருக்கிறது.
இது இந்தப் பகுதிகளுக்குரிய நோயாகும்.
உலகில் பாதிக்கும் மேற்பட்ட கருங் காய்ச்சல் பாதிப்புகள் இந்தியாவில் ஏற்படுகின்றன.