ஹைதராபாத் ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காலா அசார் எனப்படும் கருங்காய்ச்சலை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்தை (அம்போடெரிசின் டி) 10 நாட்கள் வரை மெதுவாக செலுத்துவதைச் சாதிக்க முனைந்திருக்கின்றனர்.
இது லெயிஸ்மானியா வகையின் ஒட்டுண்ணிகளால் உருவாக்கப்படும் ஒரு நோயாகும்.
இது பாதிக்கப்பட்ட பெண் இனத்தின் மண் ஈக்களின் கடியால் பரப்பப்படுகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்குகின்ற இந்நோய் முறையாகச் சிகிச்சையளிக்கப் படாவிடில் ஏறக்குறைய அபாயகரமானதாகும்.
இது மலேரியாவிற்குப் பிறகு உலகில் இரண்டாவது மிகப்பெரிய ஒட்டுண்ணிக் கிருமியாகும்.
கருங்காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் காலா அசார் மற்றும் டம்டம் காய்ச்சல் ஆகிய இரண்டும் புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்கள் என்று வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
இந்தியாவில், இந்த நோய் மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படுகிறது.