இந்தியாவில் 2007 ஆம் ஆண்டில் 44,533 ஆக பதிவாகியிருந்த கருங்காய்ச்சல் நோய்ப் பாதிப்புகளின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 834 ஆக குறைந்து 98.7 சதவீத சரிவினைக் கண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து கருங்காய்ச்சல் நோய்ப் பாதிப்பினை ஒழிப்பதாக இந்தியா உறுதி பூண்டுள்ளது.
நோய் ஒழிப்பு என்பது, வருடாந்திர கருங்காய்ச்சல் பாதிப்பினை துணை மாவட்ட அளவில் 10,000 பேருக்கு 1 நபர் என்ற வீதத்திற்கும் குறைவான அளவிற்குக் குறைப்பது என வரையறுக்கப் படுகிறது.
மலேரியாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது கொடிய ஒட்டுண்ணி மூலம் பரவக் கூடிய உயிர்க்கொல்லி நோயாக கருங்காய்ச்சல் கருதப்படுகிறது.