கருச்சிதைவு மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு நினைவு தினம் - அக்டோபர் 15
October 19 , 2024 207 days 156 0
கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல் அல்லது பச்சிளம் குழந்தை இறப்பு ஆகிய பலவற்றினால் உயிரிழந்தக் குழந்தைகளின் நினைவைப் போற்றும் வகையில் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பக் கால மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பினால் பாதிக்கப்படுபவர்கள் எதிர் கொள்ளும் உணர்ச்சி மற்றும் பல மனரீதியானச் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் குறிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் இறந்து பிறக்கின்றன என்பதோடு இவற்றில் பல இறப்புகள் தவிர்க்கப் படக் கூடியவை.
20 முதல் 30 வயதுடைய பெண்களில் 20 வார கரு வளர்ச்சிக்கு முன்னதாக கருச்சிதைவு ஏற்படுவதற்கான நிகழ்தகவு 8.9% ஆகும்.
இது 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 74.7% ஆக அதிகரிக்கிறது.