தடோபா அந்தேரி புலிகள் காப்பகம் நவேகாவோன் நக்சிரா புலிகள் காப்பகம் மற்றும் மகாராஷ்டிராவிலுள்ள பெஞ்ச் புலிகள் காப்பகம் ஆகியவற்றில் ஒரு அரிதான கருஞ்சிறுத்தை தென்பட்டுள்ளது.
இவை பெரும்பாலும் தென்மேற்கு சீனா, பர்மா, நேபாளம், தெற்கு இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் தெற்குப் பகுதி ஆகிய பகுதிகளிலேயே காணப் படுகின்றன.
இந்தியாவில் இவை தென்னிந்தியாவின் அடர்ந்த வனப்பகுதியில் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் காணப்படுகின்றன.
இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் சிவப்புப் பட்டியலில் ‘எளிதில் பாதிக்கக் கூடிய உயிரினங்கள்’ என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.